கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தயிர் !

தயிரிலுள்ள வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், லாக்டிக் ஆசிட் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

தயிரிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைக்கவும், பொடுகை குறைக்கவும் உதவுகிறது.

எனவே தயிரை நேரடியாக கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம்.

தயிருடன் தேன் கலந்த ஹேர்மாஸ்க் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. கூந்தலுக்கு பளபளப்பை அளிக்கிறது.

தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைப்பகுதியை சேர்த்து கூந்தலின் வேர்க்காலில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்வு தவிர்க்கப்படுகிறது.

தயிர் மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தும் போது, பொடுகு தொல்லைக்கு தீர்வு கிடைக்கிறது. கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தி, பளபளப்பை அளிக்கிறது.

தயிருடன் மஞ்சள் தூள் கலந்த ஹேர்மாஸ்க் பயன்படுத்தி வர, கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதுடன், வளர்ச்சியும் அதிகரிக்கக்கூடும்.

பொடுகு தொல்லையை குறைக்க தயிருடன் எலுமிச்சை சாறை சேர்த்து பயன்படுத்தலாம். ஆனால், ஷாம்பூவால் தலைக்கு குளிக்க வேண்டும்.