அம்மாவாக இருப்பது சவாலான வேலை : காஜல் அகர்வால்
பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கவுதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விபத்து காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக தற்போது அவர் தீவிர வாள் சண்டையை கற்று வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது, அதற்கு நீல் கிக்சுலு என்று பெயர் சூட்டினார்.
தற்போது நீலின் படத்தை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால் தனது தாய்மை உணர்வு பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடவுள் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன் - என இன்ஸ்டாவில் எழுதியுள்ளார் காஜல்.