குடல் பிரச்னைகளைப் போக்கும் துளசி இலை..!

எண்ணற்ற மருத்துவப் பலன்கள் கொண்ட மூலிகைச் செடி துளசி. வெண் துளசி, கருந்துளசி, கிருஷ்ண துளசி, முள் துளசி, கற்பூர துளசி உட்பட பல வகைகள் இதில் உள்ளன.

காற்றிலுள்ள கரியமில வாயுவை கிரகித்து பிராண வாயுவாக வெளியேற்றும் துளசி இலையானது, காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு நீங்க உதவும்.

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். செரிமான ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் பெறலாம்.

துளசி இலை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவைத் தவிர்க்க உதவுகிறது.

துளசி இலைக்கு மனஅழுத்தம், நரம்புக் கோளாறு, நினைவுத் திறன் இழப்பு, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

இதன் சாற்றில் தேன், இஞ்சி கலந்து அருந்தலாம். இது நாள்பட்ட சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.