நீரிழிவு பாதிப்பும், கால் வலியும்... தீர்வுகள் சில
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கால் வலி ஏற்படுவது பொதுவானது என கூறப்படுகிறது.
குறிப்பாக குளிர்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாகும் போது கால் வலி அதிகரிக்கும்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்களுக்கும், எலும்பு தேய்மானம் இருந்தாலும் இது போன்ற வலி ஏற்படும்.
இதற்கு தீர்வாக, வைட்டமின் சி சத்துள்ள உணவு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும்.
சுடு தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது வலியிலிருந்து நிவாரணம் தரும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்க வேண்டும்.
ஏ.சி., அறையில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பல மாதங்கள் ஒரே செருப்பை அணியாமல் மாற்ற வேண்டும். மேலும் மருத்துவ செருப்பை அணியலாம்.