எடையை குறைக்க ஆர்வமா?- காலையில் அருந்த வேண்டிய அற்புத பானங்கள்..!
வெதுவெதுப்பான நீரில் தலா 2-3 சிட்டிகை மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
2 கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் மற்றும் ஓமத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி, மெதுவாகப் பருகவும். இந்த எடை இழப்புக்கு ஏற்ற பானமாகும்.
வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து அதனுடன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையையும் சேர்த்து காலையில் குடித்தால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.
இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து, காலை டீ அல்லது காபி சாப்பிடலாம்.
இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உட்கொண்டவுடன், ஊறவைத்த பாதாம் போன்ற சில பருப்புகள் அல்லது பூசணி விதைகள் போன்றவைகளை சாப்பிடலாம்.
நீங்கள் இனிப்பு ஏதாவது சாப்பிட விரும்பினால், திராட்சை, பேரிச்சம் பழங்கள் அல்லது புதிய பழங்களைத் தேர்வு செய்யலாம்.