குழந்தைக்கு எந்த வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்?
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு பின்னர் இணை உணவை தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் தருவது நல்லது.
தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தருகிறது.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சி மேம்படவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தாய்ப்பால் உதவுகிறது.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் அதீத சத்து உடையது. இதை தவறாமல் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் தாய்ப்பால் இல்லாமல் வேறு ஏதாவது உணவை கொடுத்தால், அது குழந்தையின் ஜீரண சக்தியை பாதிக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இடையே உள்ள பிணைப்பு அதிகரிக்கிறது.
பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவதால், பிரசவத்தின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படும்.கர்ப்பப்பை சுருங்க உதவும். தாயின் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும்.