அரிய வகை மூலிகை- ஊமத்தையின் மருத்துவ பயன்கள்

மலைப் பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான (நீல ஊமத்தை/கரு ஊமத்தை).அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு.

ஊமத்தை காரத்தன்மையும், கசப்பு தன்மையையும் கொண்ட தாவரமாகும். இது உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும், பசியைக் கட்டுப்படுத்தும்.

ஊமத்தை இலை அல்லது பூவை உலர்த்தி சுருட்டு போல் செய்து, பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து வெளியில் விட்டால் காச நோய் கட்டுக்குள் வரும்.

1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில், 1/2 லிட்டர் ஊமத்தை இலைச்சாற்றைச் சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைத்து, நீண்ட நாட்களாக ஆறாமல் புண்கள் இருந்தால் அந்த இடத்தில் தடவி வந்தால், விரைவில் குணமாகும்.

ஊமத்தை இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தேள், பூரான் கடித்த இடத்தில் பற்றுப்போட்டால் வீக்கம் மறையும்.

பிஞ்சு ஊமத்தைங்காயுடன் சிறிது உமிழ்நீர் சேர்த்து அரைத்து தலையில் ஒரு மாதத்திற்கு தேய்த்து வந்தால், பேன்கள் நீங்கி தலைமுடி வளரும்.