தூங்கி எழுந்ததும் உடல் வலி உண்டாவது ஏன்?
தூங்கி எழும்போது உடலில் நம்மால் இயக்கக் கூடிய தசைகளில் வலி ஏற்பட முக்கியக் காரணம் தூங்கும் நிலை.
தவறான நிலையில் தலை வைத்துப் படுப்பது, கோணல் மாணலாக உடலை வளைத்துத் தூங்குவது உள்ளிட்டவை உடற்தசைகளுக்குப் பல மணிநேரம் அழுத்தம் கொடுக்கும். இதனால் வலி ஏற்படலாம்.
சரியான தலையணை மற்றும் படுக்கையைத் தேர்வு செய்து சரியான நிலையில் தூங்குவதால் தசைகளுக்கு சரிசமமாக அழுத்தம் பகிரப்படும். இதனால் ஒரு பகுதியில் மட்டும் அழுத்தம், வலி ஏற்படாது.
மிகவும் கடினமான அல்லது மிக மிருதுவான மெத்தையைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். இரண்டுமே உடல் தசைகளுக்குத் தொல்லை தருபவை. மித கனமுள்ள மெத்தையே சிறந்தது.
அதீத உடற்பருமன் தசைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது நல்லது.
ஸ்லீப் ஆப்னியா எனப்படும் குறட்டைத் தொல்லை உள்ளிட்ட சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு தசை வலி ஏற்படலாம். இதற்குப் பெரும்பாலும் உடற்பருமனே காரணமாக உள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட பாதிப்பு கொண்ட வயோதிகர்களுக்கு தசை வலி ஏற்படலாம். இரண்டையுமே இவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் தசை வலியில் இருந்து தப்பலாம்.