கழுத்து எலும்புகள் அடிக்கடி வலிக்க காரணமும்.. தீர்வும்...!

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்க வழக்கங்களால் சிறு வயதினருக்கு கூட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கழுத்து எலும்பு தேய்மானம் பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் வரும்.

கடினமாக பணி செய்பவர்கள், சுமைப்பணியாளர்களுக்கும், தொடர்ந்து ஸ்மார்ட்போன் பார்ப்பதாலும், கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களுக்கும் கழுத்து எலும்பு வலி ஏற்படுகிறது.

கழுத்தில் வலி இருப்பவர்கள் டாக்டர்களை அணுகி எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.

பாதிப்பு இருந்தால் நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். சுமை பணியாளர்கள் சுமப்பதை குறைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரம், கம்ப்யூட்டரில் பணி செய்யும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பிசியோதெரபி சிகிச்சை செய்து கொள்ளலாம். வலியை குறைக்க தற்காலிகமாக மட்டும் நிவாரண மாத்திரைகளை டாக்டரின் அட்வைஸ்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிழங்கு வகைகள், இயற்கையான காய்கறிகள், கீரைகள் அடிக்கடி சாப்பிடலாம். மீன், முட்டை சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.