மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி !
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் இரண்டாம் பாகப் படங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வர ஆரம்பித்தது.
அந்த விதத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வந்துள்ள 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் கார்த்தி தெரிவித்திருந்தார்.
கார்த்தி நடித்து அடுத்த வருடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளது.
அதற்கடுத்து 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளோம் என்றும் கார்த்தி நேற்று சொன்னார்.
'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் சொன்னதால் அடுத்தடுத்து மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி நடிக்கப் போகிறார்.
தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களில் வேறு எந்த ஒரு நடிகரும் நடித்தது இல்லை.
'பொன்னியின் செல்வன் 2' அடுத்த வருடம் கண்டிப்பாக வந்துவிடும்.
'கைதி மற்றும் சர்தார்' ஆகியவற்றின் இரண்டாம் பாகம் சொன்னபடி நடந்தால் அது சிறப்பான விஷயம்தான்.