எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகள் என்னென்ன?
ஒருசில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என அழைக்கப்படுகிறது. இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்றும் கூறுவர்.
தொற்று அல்லது ஆப்ரேஷன் காரணமாக ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ, ஹார்மோன் காரணிகள், மரபணு குறைபாடுகள் உட்பட பல்வேறு காரணங்களால் எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம்.
கரு ஃபெலோப்பியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் வளர்ச்சி சீராக இருக்காது; கர்ப்பகாலம் முழுவதும் கருவை வளர்க்க முடியாது. தாயின் பாதுகாப்புக்காக கருவை அகற்ற வேண்டியிருக்கும்.
கருவானது கருப்பையில் அல்லாமல் கருக்குழாயில் தங்கி இருக்கும் போது சில அறிகுறிகள் தென்படக்கூடும்.
இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து பகுதியில் கூர்மையான வலி, அடிவயிற்றில் கடுமையான அல்லது தாங்க முடியாத வலி, இலேசானது முதல் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.
மயக்கமான உணர்வு மற்றும் மலக்குடல் அழுத்தம் உணர்வும் இருக்கக்கூடும்.
கர்ப்பத்தின் போது இதுபோன்ற அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் டாக்டரிடம் உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும்.