ப்ரோக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள் இதோ !

முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி. இதில் செலினியம், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீசு, தாமிரம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

ஒரு கப் பச்சை ப்ரோக்கோலியில் 25 கலோரிகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. 90 கிராம் ப்ரோக்கோலியை சாப்பிட 100 சதவீதத்துக்கும் மேற்பட்ட வைட்டமின் ஏ, கே மற்றும் சி சத்து கிடைக்கிறது.

ப்ரோக்கோலியிலுள்ள தன்மைகள் புற்றுநோய் மற்றும் அதன் செல்கள் பரவுவதை தடுக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இது தமனிகள் சேதமடைவதை குறைப்பதன் மூலம் இதய நோய் தொடர்பான பாதிப்பை தவிர்க்க உதவுகிறது. மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு திசு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

இதிலுள்ள இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, மற்றும் பி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துகள் எலும்பு வலிமையை மேம்படுத்துகின்றன.

இதிலுள்ள சல்ஃபோரபேன் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைப்பலும் பங்கு வகிக்கிறது.

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட நோய்களின் பாதிப்பை குறைக்கக்கூடும். வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது.

எனவே, குருமா, சாலடு, சூப் மற்றும் ஸ்மூத்தி என பல்வேறு விதமாக, ப்ரோக்கோலியை அவ்வப்போது சாப்பிடுவதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.