ஆந்தையைப் போன்று விழித்திருக்கிறீர்களா..? சீக்கிரம் தூங்கி எழுவதற்கான வழிகள்...
மூன்றில் ஒரு பிரிவினர் ஆந்தையை போல இரவு முழுக்க தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் நிம்மதியாக தூங்கி காலையில் சீக்கிரம் எழ சில டிப்ஸ்...
அறையில் வெளிச்சம் தரக்கூடிய பொருட்களை விட்டு விலகலாம். செல்போனை தவிர்த்து ஒரு புத்தகத்தைப் படிக்க முயற்சிக்கலாம். இது உங்களுக்கு நன்மை அளிப்பதுடன் சீக்கிரம் தூங்க வைக்கும்.
நம் உடலில் இயற்கையாக உயிரியல் கடிகாரம் அமைந்துள்ளது. இரவு 10 மணிக்கு தூங்குவது என முடிவு செய்துவிட்டால் விடுமுறை நாள், வார இறுதி நாட்கள் என எப்போதும் கடைபிடியுங்கள்.
கார்போஹைட்ரேட், அதிக கொழுப்புள்ள உணவுகள் தூக்கத்தை சீர்குலைப்பவை. எனவே, எளிய புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகளை சாப்பிட முயற்சிக்கவும்.
காலையில் சீக்கிரம் எழ அலாரம் வைப்பது உதவாது. ஸ்னூஸ் பட்டனை அழுத்தி, அழுத்தி மேலும் 2 மணி நேரம் தூங்கவே செய்வோம். எனவே, காலையில் அறையில் சூரிய ஒளி பட வேண்டும்.
காலை எழுந்து உடற்பயிற்சி செய்வது பகல் நேரத்தில் அதிக விழிப்புடன் இருக்கச் செய்யும், இரவில் சீக்கிரம் தூக்கத்தை தூண்டும்.
உடற்பயிற்சி, சத்தான உணவு, புத்தகங்களை படிப்பது போன்றே, உடலுறவும் சிறந்த தூக்கத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது என்பது டாக்டர்களின் அட்வைஸ்.