காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பவரா? இது உங்களுக்குத்தான்...!
இரவில் 8 - 9 மணி நேரம் உணவின்றி வயிறு காலியாக இருக்கும். முதல்நாள் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாகி மலக்குடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்.
இந்நிலையில் காலையில் வயிற்றில் செரிமான அமிலம் அதிகளவில் சுரந்திருக்கும். அமிலத்தின் சூட்டைத் தணிக்க காலை எழுந்து பல் துலக்கிய பின் தண்ணீர் அருந்துவது நல்லது.
பின் வாழைப்பழம், பிஸ்கெட் உள்ளிட்டவற்றோடு காபி அருந்துவது நல்லது. ஆனால், காலை எழுந்ததும் நேரடியாக ஸ்ட்ராங்கான பில்டர் காபி அருந்தினால் அசிடிட்டியை உண்டாக்கும்.
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது, கார்ட்டிசால் ரசாயன செயல்பாட்டைச் சீர்குலைத்துவிடும்.
இப்படி காபி சாப்பிடுவது தொடர்ந்தால், அந்த ஹார்மோன் அழியும் நிலையேகூட உண்டாகி, உடலுக்கு வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
காலையில் வெறும் வயிற்றில் காபி சாப்பிடுவது நாளின் பிற்பாதியில் நாக்கு மற்றும் உடலை வறட்சி அடையச் செய்துவிடும். அதன்காரணமாக, நாம் உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவைக் கடுமையாகப் பாதிக்கும்.
சரியான அளவில் நம் உடலில் இருந்து வியர்வையாகவோ, சிறுநீராகவோ நீர் வெளியேறவில்லையெனில் உடலுக்குப் பல பக்க விளைவுகள் ஏற்படும்.
வெறும் வயிற்றில் காபி, டீ உள்ளிட்ட கஃபைன் பானங்கள் உட்கொள்ளும்போது, உயர் ரத்த அழுத்தத்துக்கு காரணியாக உள்ளது. எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரீன் டீ, மோர் ஆகியவற்றை முயற்சிக்கலாம்.
காலை உணவு முடித்து அரைமணி நேரத்துக்குப் பின் காபி சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே காலை 6 மணி பதிலாக 11 மணி காபி சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள்.