இரும்புச்சத்து கிடைக்க இந்த விதைகளை டிரை பண்ணுங்க

சீரகத்தில் நிறைய இரும்புச்சத்தும், ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது. தினமும் சமையலில் சேர்த்து வர இரும்புச்சத்து உடலில் அதிகரிக்கும்.

பூசணி விதையில் மினரல்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், தினமும் சிறிதளவு உட்கொள்ளலாம்.

எள்... இதில் கால்சியம், இரும்புச்சத்து உட்பட பல்வேறு சத்துகள் உள்ளதால், எள் உருண்டையாகவோ அல்லது வறுத்த எள்ளாகவோ ஒரு ஸ்பூன் அளவு தினமும் சாப்பிட ஆரோக்கியம் மேம்படும்.

கருஞ்சீரகம்... சிறிது கசப்புத்தன்மை கொண்ட இந்த கருஞ்சீரகம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. அடிக்கடி உணவில் சேர்த்து வர இரும்புச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

ஆளி விதையில் நார்ச்சத்துக்கள், இரும்பு மற்றும் ஒமேகா 3 கொழுபபு அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே, தினமும் ஒரு ஸ்பூன் அளவு இதை சாப்பிட உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

சூரியகாந்தி விதையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது ரத்தச்சோகை பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.