சருமத்தின் சுருக்கம் நீங்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!
சருமத்தின் நெகிழ்வுத் தன்மை குறைவாலும், உலர்ந்து போவதாலும், சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
வயதானவர்கள், வெயிலில் அலைபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
வைட்டமின்-சி, ஏ, நிறைந்த, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளி பழத்தை, தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள், தங்களின் தினசரி உணவில், ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் உண்ண வேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட் அல்லது ஏதாவது ஒரு பழ ஜூசை பருக வேண்டும்.
சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம்.
தோல் வறண்டு போகாமல் இருக்க, தினமும், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர்
முகத்தைக் கழுவ சோப்பை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, சோப்புத் தன்மை இல்லாத பேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் போதிய அளவு கிடைப்பதால், நம் சருமம், பளபளவென ஜொலிக்கும்.