அதிக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்யலாம்? சில டிப்ஸ் இதோ!
அதிக அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கு தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்றவை உட்கொண்ட படி இருக்க வேண்டும்.
வயிற்றிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது, அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் பருக வேண்டும்.
சிறுநீர் செல்வதும் தடைபடக் கூடாது; அதன் நிறத்தையும் கண்காணிக்க வேண்டும்.
'ஓரல் ரீஹைட் ரேஷன் சொல்யூஷனை' (ஓ.ஆர்.எஸ்.,) வீட்டிலேயே தயாரித்துக்கொடுக்கலாம். ஒரு டீஸ்பூன் சால்ட், எட்டு டீஸ்பூன் சர்க்கரை, கொதிக்க வைத்த குடிநீர் 1,000 மி.லி., ஆகியவை கலந்து குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் எலுமிச்சை சில துளிகள் சேர்க்கலாம்.
இளநீர், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவை பருகலாம். இவை எல்லாம் உங்களை நீரேற்றமாக வைக்கும்.
அரிசி கஞ்சி குடிக்கவும். அல்லது அரிசியும், பருப்பும் சம அளவில் கலந்து, பிரெஷர் குக்கரில் வேக வைத்து, நன்கு மசித்து, உப்பு கலந்து, மீண்டும் கஞ்சி போலக் குழைத்து சாப்பிடலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி மேட் பழச்சாறுகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சுயமாக மாத்திரைகள் வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து வாங்க வேண்டும்.