நெஞ்செரிச்சலை தவிர்க்க எளிய வீட்டு வைத்திய டிப்ஸ்கள் இதோ...!

அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான வாய்வு, அஜீரணம், குமட்டல், இரைப்பை எரிச்சல் போன்றவற்றிலிருந்து விடுபட ஒரு கிராம்பு துண்டினை வாயில் அடக்கி மெல்லலாம்.

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு சென்றால் அசிடிட்டியை போக்கும்.

தினம் இரண்டு ஏலக்காயை மெல்லுவது அமிலத்தன்மை, வாய்வு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.

ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு அமிலத்தன்மையைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தைப் பொடி செய்து குடிப்பதால், அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான நெஞ்செரிச்சல், வயிறு இரைச்சல் சரியாகும்.

ஒரு சிறிய கட்டி வெல்லத்தை வாயில் அடக்கினாலும் அசிடிட்டியின் அறிகுறிகள் சரியாகும். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் செரிமான அமைப்பை வலுவாகவும், சாதாரணமாக செயல்படவும் உதவுகிறது.

மோரும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்குகிறது. அதில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு பயன்படுகிறது. மிளகு மற்றும் கொத்தமல்லியுடன் ஒரு கிளாஸ் மோர் அமிலத்தன்மையை குறைக்கும்.

இஞ்சி டீ குடிப்பது அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளைத் தடுக்க உதவும்.

வாழைப்பழமும் அமிலத்தன்மையை சரிசெய்யும்.