மாணவர்களே உஷார்... வேண்டாமே தவறான முடிவு !

என்.சி.ஆர்.பி., என்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையிலான சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஒட்டு மொத்த தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 % அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலை வழக்குகள் மட்டும் 4 % அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த மாணவர்களின் தற்கொலைகள் கடந்த 2021 - 2022க்கு இடையிலான காலகட்டத்தில் 6 % குறைந்து, 53 % ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் மாணவிகளின் தற்கொலைகள் 7 % அதிகரித்துள்ளன.

கடந்த பத்தாண்டுகளில், மக்கள் தொகை 0-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்துள்ளது.

அதேவேளையில், மாணவ, மாணவிகளின் தற்கொலை எண்ணிக்கை 6,654ல் இருந்து 13,044 ஆக அதிகரித்துள்ளது மிகவும் கவலையை அளித்துள்ளது.

எனவே, மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமான படிப்புக்கான சூழலை உருவாக்கித் தர வேண்டிய சூழல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.