குழந்தைக்கு பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?
எந்த அம்மாவுக்கும் தாய்ப்பால் போதவில்லை என்ற குறை வராது. மனம் தான் காரணம்.
குழந்தை பிறந்தவுடன் வருவது சீம்பால். அது சொட்டு சொட்டாக தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என்று தாய் நினைப்பது தான் காரணம்.
குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்க ஆரம்பிக்கும். இது தான் இயற்கை.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், அதிகமான வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம்.
சத்தான சரிவிகித உணவுகளை பின்பற்ற வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும்.
எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும்.
மிக அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும்.
குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒருசிலருக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்படும்.
குழந்தை பாலுக்காக மட்டும் அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி.
சிறுநீர், மலம் கழித்திருக்கலாம்; படுத்திருக்கும் நிலையோ, கையில் வைத்திருக்கும் நிலையோ அசவுகரியத்தை தரலாம் அல்லது உடல் சூடா என காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.