காய்ச்சல் இருக்கும் போது தலைக்கு குளிக்கலாமா?
கடுமையான காய்ச்சல் இருக்கும் போது உடலில் சக்தி குறைந்திருக்கும்.
இந்நிலையில் தலைக்கு குளித்தால் இன்னும் சிறிது சக்தி குறைந்துவிடும்.
பொதுவாக உடலின் சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டால் தான் காய்ச்சல் விரைவில் குணமாகும்.
மேலும், அதிக சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரிலும், ஷவரிலும் குளிக்கும் போது திடீரென உடலின் வெப்பநிலை மாறும்.
இதனால் உடல்நிலை சீர்கெட வாய்ப்புள்ளது.
எனவே, தண்ணீரில் நனைத்த துணியால் உடலை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.