ஆரோக்கியமான கம்பு சட்னி!

தேவையான பொருட்கள்: கம்பு - 50 கிராம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி - 1

உப்பு, காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் மற்றும் தண்ணீர் - சிறிதளவு. பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.

கம்பு தானியத்தை சுத்தம் செய்து, தண்ணீரில், 30 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

பின், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து, தேவையானளவு தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும்.

கடுகு, சீரகம், பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதுடன் கலக்கவும்.

இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு சட்னி ரெடி. தோசை, இட்லிக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.