பிளம்ஸ் சீசன் வந்தாச்சு… நாவிற்கு மட்டுமல்ல உடலுக்கும் நல்லது…
பிளம்ஸ் பழம் சுமார் 40 வகைகளை உள்ளடக்கியது. பிளவினாய்ட்ஸ் எனும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இதில் வைட்டமின்களில் மட்டும் ஏ, சி, கே, இ மற்றும் வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 வரை நிறைந்துள்ளன.
மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைப் பெற முடியும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு எடுக்கும் போது பிளம்ஸ் சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும். மேலும் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவும்.
இப்பழத்தில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பிளம்ஸ் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான பிரச்னை, மலச்சிக்கல் சீராகும்.
இப்பழத்தில் மெக்னீசியம் சத்து உள்ளது. இது உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கும்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். குறிப்பாக சிறுநீரக வேலைகளை சீராக்கி நச்சுகள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.