நடிகர் திலகம் சிவாஜிக்கு 1969ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு அவர் 9 படங்களில் நடித்தார். அந்த படங்கள் பற்றிய விபரம் வருமாறு...

நிறைகுடம் : முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்க, சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, முத்துராமன், சோ, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்தனர்.

அஞ்சல் பெட்டி 520 : சிவாஜி, சரோஜாதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடித்து, டி.என்.பாலு இயக்க, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.

அன்பளிப்பு : சிவாஜி, சரோஜாதேவி நடிக்க, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவானது. இந்த படம் வரவேற்பை பெறவில்லை.

காவல் தெய்வம் : கே.விஜயன் இயக்கத்தில், உருவான படம். படத்தின் கதையை ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.

குருதட்சனை : சிவாஜியும் பத்மினியும் நடித்து, ஏபி.நாகராஜன் இயக்கத்தில் உருவான படம்.

தங்கச் சுரங்கம் : டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி, பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ்.வரலட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் நடித்தனர்.

தெய்வமகன் : சிவாஜியின் புகழ் பெற்ற படமான தெய்வமகன் இந்த ஆண்டில் வெளியானது. ஏ.சி.திருலோகசந்தர் இயக்க, சிவாஜி மூன்று வேடங்களில் நடித்தார்.

திருடன் : கே.பாலாஜியின் தயாரிப்பில், ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் கே.ஆர்.விஜயாவுடன் சிவாஜி நடித்த படம்.

சிவந்த மண் : ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி, காஞ்சனா நடித்த படம். முதன் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவாஜி படம்.