மெனோபாஸ் அறிகுறிகள் என்னென்ன!! அறிவோமா!!

மெனோபாஸ் நடைபெறும் போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் தோன்றுகின்றன.

மாதவிடாய் நின்ற சமயத்தில் அதைத் தொடர்ந்து ஏற்படும் அறிகுறி நபருக்கு நபர் வேறுபடும். முகம், கழுத்து, மார்பு பகுதிகள் சிவந்து போகும்.

இரவில் அதிகப்படியான வியர்வை ஏற்படும். மன ரீதியான சோர்வு, பதட்டம் அதிகரிக்கும்.

மெனோபாஸ் நடக்கும் போது தொடர் ரத்தப்போக்கு ஏற்படும்.

ஹார்மோன் மாற்றங்களினால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

மாதவிடாய் நிறுத்தத்தில் எலும்பு அடர்த்தி குறைவது முக்கிய குறைபாடாகும்.

இந்த பிரச்னைகளுக்கு ஹார்மோன் தெரபி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கால்சியம், விட்டமின், இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும்.