பளபளக்கும் சருமத்தை பெற பப்பாளி பேஸ் பேக் போதும்!

பப்பாளியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் முகப்பரு, பிக்மென்டேஷன் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கிறது.

சருமப்பராபரிப்பு ஏற்ற இந்த பப்பாளி கொண்டு பேஸ் பேக் எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என இப்போது பார்ப்போம்.

பப்பாளி பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள் : 2 டீஸ்பூன் பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் வெள்ளரி சாறு, அரை தேக்கரண்டி தேன்.

ஒரு கிண்ணத்தில் இம்மூன்றையும் சேர்த்து, நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் ஆக்கினால் பப்பாளி பேஸ் பேக் தயார்.

பின்னர் தயாரிக்கப்பட்ட பேக்கை உங்கள் கைகளால் முகம் மற்றும் கழுது முழுவதும் தடவவும்.

அதன் பிறகு, இந்த பேக்கை முகத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும்.

பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும். வாரத்திற்கு 3 முதல் 4 முறையாவது இந்த பேக்கைப் பயன்படுத்தலாம்.

இந்த பேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும்