மழைக்காலத்தில் முடக்கறுத்தான் நல்ல தேர்வு!

வேலிகளில் படர்ந்து கிடக்கும் முடக்கத்தான் கீரையில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன.

இதைதொடர்ந்து உண்டு வந்தால் வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறிப்பாக முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருப்பதால், முடக்கு அறுத்தான், என நம்முன்னோர்கள் இதற்கு பெயர் வைத்தார்கள் என கூறப்படுகிறது

இந்த கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, தாதுசத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன

மூட்டு வலியினால் அவதிபடுபவர்கள் முடக்கத்தான் இலைகளை விளக்கெண்ணெயில் காய்ச்சி, மூட்டில் வலியுள்ள இடங்களில் பூசினால் வலி நீங்கும்.

இதன் இலைகளை மையாக அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிடலாம். வலி பிரச்னை உள்ளவர்கள், 3 நாளுக்கு ஒரு முறை இப்படி செய்து சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

இந்த பருவத்தில் வரும் சளியை குணமாக்க, முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.

பொடுகுத் தொல்லை போக இந்த இலையை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் நல்ல பலன் தரும்.