ஜூரவெட்டு என்றால் என்ன?
ஆறு மாத குழந்தைகள் முதல் ஆறு வயது வரையான சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது வலிப்பு நேரிட்டால் அதை ஜூர வெட்டு என்போம்.
இவ்வாறான வலிப்பு பெரும்பாலும் அபாயமானது அல்ல. தொடர்ச்சியாக வலிப்பு மருந்துகள் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
காய்ச்சல் ஏற்படும் போது மட்டும் வலிப்பு மருந்து கொடுத்தால் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சலின் போது ஒரே நாளில் 2 அல்லது 3 முறை வலிப்பு வந்தாலோ, காய்ச்சல் இல்லாத போதும் வலிப்பு வந்தாலோ தொடர்ச்சியாக வலிப்பு மாத்திரைகளை கொடுக்க வேண்டும்.
வயது ஆறு மாதமாகும் முன்போ, ஆறு வயது ஆனபின்போ ஏற்படும் வலிப்புகளுக்கு காய்ச்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாத்திரைகள் கொடுக்க வேண்டும்.
ஜூரவெட்டு வருவதால் மட்டும் எந்த குழந்தைக்கும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர் நிம்மதியாக இருக்கலாம்.