காய்ச்சல், சளி இல்லாமல் மழை சீசனை கடப்பது எப்படி?
மழைக்காலத்தில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றத்தால் உடல் வெப்பநிலையில்
ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது.
இந்த சமயத்தில் ஈரப்பதம் மற்றும் குளிர் சேர்ந்துகொண்டு நம்மை சளி, இருமல் மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க...
ஈரப்பதம் மிகுந்த நேரத்தில் சூடான, சத்தான சூப்களை குடியுங்கள். தூதுவளை ரசம் பெஸ்ட். நிறைய நீர்ச்சத்தை உட்கொள்ள வேண்டும். குளிர்ச்சி ஏற்படுத்தாத பழச்சாறுகளை குடிக்கலாம்.
குளிரூட்டப்பட்ட உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கவும். கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கவும்.
நிறைய பழங்கள், காய்கறிகள் கொண்ட சத்தான உணவுகளை உண்ணுங்கள். போதியளவு தூக்கம் தேவை. உடற்பயிற்சியினை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அலுவலகம் செல்லும்போதும், பஸ், ரயில் பயணங்களின் போதும் முகக்கவசம் அணியுங்கள். ஜலதோஷம் அல்லது காய்ச்சலைத் தடுக்க இது சிறந்த வழி.
மழைக்காலத்தில் முடிந்தளவு வெளியே செல்வதை தவிர்க்கவும். அப்படியே சென்றாலும், திரும்பி வந்தவுடன், சூடான தண்ணீரில் சோப்பு போட்டு குளியுங்கள்; இது வைரஸ்களை அழிக்கும்.
அதுமட்டுமா முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள், முகப்பரு, தேமல் என அனைத்து சரும பிரச்னைகளையும் நீக்கி தெளிவான முகத்தை மீட்டுத் தரும்.