பெண்களுக்கு இருக்கும் பி.சி.ஓ.வால் வரும் பிரச்னைகள் குறித்து அறிவோமா?

பி.சி.ஓ., எனப்படும் சினைப்பையில் உருவாகும் நீர்கட்டிகள் கர்ப்பம் தாமதமாவதற்கும் கருச்சிதைவுக்கும் ஒரு காரணமாக அமையலாம்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கருமுட்டை தன்மை குறையும் அல்லது கருமுட்டை உருவாகாது.

ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருமுட்டைகளை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் கருவுறுதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படலாம்.

பி.சி.ஓ., உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பாகவே மகப்பேறு டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது.

ஏ.எம்.எச்., எல்.எஸ்.எச்., எப்.எஸ்.எச்., ஹார்மோன் பரிசோதனை செய்து மாற்றங்கள் இருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ரத்தசர்க்கரை அளவை சரிபார்ப்பது, மேலும் உடல் எடையில் பி.எம்.ஐ. அளவையும் சரிபார்த்து எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் டாக்டர் அறிவுரைப்படி ரத்தப்பரிசோதனை, ஸ்கேன் செய்யவேண்டும். மேலும் ரத்தசர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.

முறையான உணவு பழக்கவழக்கம் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம். குறிப்பாக மனஅழுத்தம் தவிர்ப்பது மிகவும் அவசியம்.