தோள்பட்டை வலி வர காரணங்கள் என்னென்ன?
தோள்பட்டை பகுதியில் உள்ள தசைகளின் தளர்ச்சி, தசைநார்களின் தொடர்ச்சி அறுபடும்போது அதில் வலி ஏற்படும்.
இதுதவிர கழுத்தில் இருந்து 'ஸ்காப்லா' எலும்புப்பட்டை முழுவதும் படர்ந்து சற்று கீழ்பகுதி வரை உள்ள தசைப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கம், தளர்ச்சி ஆகியவற்றால் தோள்பட்டை வலி ஏற்படும்.
கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், கடின பணிகள் செய்பவர்கள், தறி மற்றும் சுத்தியல் கொண்டு பணிபுரிவோர், கட்டடப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படும்.
இதுதவிர டென்னிஸ், கிரிக்கெட், விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு இது வரலாம்.
வயதானவர்களுக்கு தசைநார் ரத்த ஓட்டம் சீரின்மையால் அது கிழிந்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கைகளை துாக்க முடியாத நிலையும் ஏற்படும்.
நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு தோள்பட்டை மூட்டு உறை இறுக்கம் ஏற்பட்டு அதனால் வலியுடன் கைகளை இயக்க முடியாத நிலை ஏற்படும்.
எலும்பு தேய்மானமோ, உடைந்திருந்தாலோ அதிக வலி ஏற்பட்டு பாதிப்பை நோயாளிக்கு உணர்த்திவிடும். தோள்பட்டை வலியும் அதில் அடங்கும்.
நிவாரணமாக கால்சியம் நிறைந்த முட்டை, பால், மீன் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை பழக்கப் படுத்திக் கொள்வது அவசியம்.