சிறுநீரகத்தில் கல்... அறிகுறிகள் மற்றும் நிவாரணம் இதோ !

சிறுநீரகப் பாதையில் கல் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி அடிவயிற்று பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும்.

சிறுநீரகத்தில் கல் அளவைப்பொறுத்து நீர் வெளியேறும் போது எரிச்சல், கடுப்பு, ரத்தம் வெளியேறுதல் ஏற்படும்.

சிறுநீரகத்தில் உப்பு படிதலின் காரணமாக கற்கள் உருவாகின்றன.

ஒரு நாளைக்கு குறையாமல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் அருந்துவது குறையும். அப்போதும் இதுபோன்று தண்ணீர் குடிக்க வேண்டும்.

உணவில் பீன்ஸ் சேர்த்துக்கொண்டால் பாதிப்பு குறையும். சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் உப்பு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்களில் உள்ள ஆக்சிலேட் வேதிப்பொருள் சிறுநீரக கல் உண்டாக காரணமாகிறது.

சாக்லெட், கீரை வகைகள், காலிபிளவர், காளான், சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கல் பெரிய அளவில் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

பொங்கல் பூ அல்லது பூளை பூ, நெருஞ்சி முள் கஷாயம் சாப்பிட்டால் சிறுநீரக கல்லை குறைக்கலாம். இதனை சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.