பருவ மழைக்காலத்தில் விடப்படும் அலர்ட்கள் என்னென்ன?
பருவ மழைக்காலத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் மழை அலர்ட்கள். பொதுவாக 4 வித்தியசமான அலர்ட்கள் உள்ளன.
பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என அவை பிரிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே பச்சை எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இந்த சமயத்தில் அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கையைத் தரும். அப்போது மக்கள் பயணங்களை தவிர்க்கவும்.
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும்.
போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற ரெட் எச்சரிக்கைகள் விடப்படும்.