காபியில் சர்க்கரை நல்லதா, கெட்டதா? ஆய்வுகள் கூறுவதென்ன?

நமக்கு மிகவும் பிடித்தமான பானம் காபி. காபி உடலுக்கு நல்லதா, கெட்டதா என்று மாறி மாறி, பல்வேறு ஆய்வுகள் பலவிதமான முடிவுகளைத் தெரிவித்து வருக்கின்றன.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் காபியில் சர்க்கரை சேர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராய்ந்தனர். அதில், எலிகளை வைத்து காபியைச் சோதித்துப் பார்த்தனர்.

எலிகளுக்கு தலா 1 % கேபைன் மற்றும் சுக்ரோஸ், 0.1 % சாக்கரினும் கலந்த நீரைக் கொடுத்தனர். இதைப் பருகியதும் எலிகள் மிகவும் சுறுசுறுப்பாக மாறின.

இரவில் மட்டுமே இயங்கும் சில எலிகள் பகலில் கூட சுறுசுறுப்பாகின. அவற்றை இருட்டில் அடைத்து வைத்த போதிலும் கூட அவை துாங்கவில்லை.

இதிலிருந்து கேபைனுடன் இனிப்பு சேரும்போது, அது மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக நாம் காபி குடிக்கும் போது மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் டோபோமைன் ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் துாக்கம் வருவதைத் தடுக்கிறது.

இதனுடன் இனிப்பும் சேரும் போது, விளைவுகள் இன்னும் நன்றாக உள்ளன.

எனவே இரவு துாக்கம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.

அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்ய நினைப்பவர்கள் காபியில் இனிப்பைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

இதனுடன் பாலையும் சேர்ப்பது இன்னும் நன்மையை தரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.