கர்ப்பப்பை வாய் கேன்சர்... அதிர வைக்கும் ஸ்கேன் ரிசல்ட்
குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க, தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு, பிறவியிலேயே குறையுடன் கரு உருவாவது, இரட்டைக்குழந்தைகள் என பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கு மரபியல் ரீதியிலேயே கர்ப்பப் பையின் வாய் நீளம் குறைவாக இருந்தாலும், குறைப்பிரசவம் ஏற்படலாம்.
இந்நிலையில், சமீப காலமாக கர்ப்பப்பை வாய் கேன்சர் இருப்பதும் குறைபிரசவத்துக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30வது வாரத்தில் செய்ய வேண்டிய ஸ்கேன் பரிசோதனையில், கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தாய் உயிரைக் காப்பாற்ற உடனடியாக சிசரியன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சிலருக்கு வயிறு, நிணநீர் கட்டிகளில் பரவி, 'ஸ்டேஜ் - 4' என்ற நான்காவது நிலையில் கேன்சர் பாதிப்பும் உள்ளது.
கர்ப்பப்பை வாய் கேன்சருக்கு, சர்வேரிக்ஸ், கார்டாசில் போன்ற தடுப்பூசிகள் உள்ளன. இந்த ஊசியை போட்டால் கேன்சர் வரும் அபாயம் 90 சதவீதத்திற்கு மேல் குறையும்.
பெண் குழந்தைகளுக்கு, 10 - 14 வயதிற்குள் கர்ப்பப்பை வாய் தடுப்பூசியை போடுவது நல்லது. 10 வயதில் போட்டால் 2 டோஸ் போதும்.
தாமதமாக போடும்போது 3 டோஸ் போட வேண்டும். டீன் ஏஜ் பெண்கள், பெற்றோர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.