நொடிக்கு நொடி தும்மலா! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்!!

தும்மல் என்பது நோய் தொற்று போல பரவுவது இல்லை; ஆனால், பரம்பரையாக வரக் கூடியது. மருந்து ஒன்று தான் இதற்கு தீர்வு என்று சொல்ல முடியாது.

இதற்கு மூலக் காரணம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியில் இருக்கும் சில குறைகள். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் சரி செய்ய முடியும்.

பூவின் மகரந்த துகள்கள், துாசு, மெல்லிய துகள்கள், சில வகையான வேதிப் பொருட்களின் வாசம், சமையலறை புகை, பெயின்ட் வாசனை மூக்கில் படுவதால் தும்மல் வரும்.

மழை, வெயில், குளிர் என்று மாறி மாறி ஏற்படும் சீதோஷ்ணத்தால் சளி, காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை ஒத்தே இதுவும் இருக்கும்.

அறிகுறிகள் அதிகமாக இருந்தால் அதிக சூடு, குளிர்ச்சி, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, மிதமான சூட்டில் அன்றாட உணவுகளை சாப்பிட வேண்டும்

வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். உடனடி நிவாரணத்திற்கு, பாலில் சுக்கு பொடி சேர்த்து குடிக்கலாம்.

சாதத்தில் சிறிது உப்பு, நெய் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

அதிமதுர துண்டு, சித்தரத்தை அல்லது சுட்ட கடுக்காயின் தோல் இவற்றில் ஒன்றை வாயில் போட்டு மென்றால் தும்மல் குணமாகும்.