தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு... ஆய்வில் தகவல்!!
தமிழக மருத்துவத்துறை சார்பில் ஆண்டு தோறும் புற்றுநோய் பாதித்தோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சென்னை முதலிடம், கோவை இரண்டாமிடம், திருவாரூர் மூன்றாமிடத்தில் உள்ளன. ஈரோடு மாவட்டம் ஐந்தாமிடம்; திருப்பூர் மாவட்டம், 11வது இடத்தில் உள்ளது.
மேலும், 2019 முதல், 2023 வரை மாவட்ட வாரியாக புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், கடந்த, 11 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், கடந்த, 2012ல், 53 ஆயிரத்து 22 பேர் (ஆண்கள் 23,124; பெண்கள், 29,898 பேர்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது, 2023ல், 92 ஆயிரத்து 875 பேர் (ஆண்கள் 42,912, பெண்கள், 49, 963 பேர்) என அதிகரித்துள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
அடுத்தாண்டு, 2025ல், இந்தியாவில், 10 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், புற்றுநோய் பரிசோதனையை விரிவுபடுத்த, மருத்துவப்பணிகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.