பனிக்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்பு...

குளிர் வானிலையில் வாய் ஓரம், கன்னத்தில் என்று முகத்தில் ஆங்காங்கே வெள்ளை திட்டுகள் உண்டாகும். மேலும் சருமத்தில் வறட்சி அதிகமானால் சொரசொரப்பாகவே இருக்கும்.

சருமப் பராமரிப்பை மேம்படுத்த மேற்கொள்வது என்பது குறித்துப் பார்க்கலாம். இக்காலத்தில் மிருதுவான சோப்பையே உபயோகிக்க வேண்டும்.

தினமும் குளிக்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய் சிறிது உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

முழு பச்சைப்பயறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய பொடிகளை சம அளவு சேர்த்து பயன்படுத்தலாம்.

அதிக நேரம் குளிப்பது, மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கலாம்.

தோல் வெடிப்பு உள்ள இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த களிம்பை பூசலாம்.

வீட்டில் சரும பராமரிப்பிற்காக வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் அவற்றை தடவலாம்.