ஹெல்த்தியான முருங்கைக்காய் சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 4, தக்காளி - 1, பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 5 பல்

மிளகு, சீரகத்துாள், வெண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு, கொத்தமல்லி இலை, தண்ணீர் - தேவையான அளவு.

முருங்கைக்காயை, நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து ஆறிய பின், சதையை தனியாக பிரித்து எடுக்கவும்.

அதை, வெந்த பட்டாணியுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளியை வதக்கவும்.

அத்துடன், அரைத்த விழுது, மிளகு, சீரகத்துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின், நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால், சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.

அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.