இண்டர்நெட் மூவி டேட்டா பேஸ், சுருக்கமாக ஐ.எம்.டி.பி (IMDb) , இந்தியாவின் மிகச்சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம், 8.8 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

யாஷ் சோப்ரா நடிப்பில் வெளியான கே.ஜி.எப் - 2, 8.5 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

1990ல் நடந்த காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை விவரிக்கும், தி காஷ்மீர் பைல்ஸ், 8.3 மதிப்பெண்களுடன் 3வது இடம் பிடித்துள்ளது.

மலையாள படமான, ஹிருதயம் 8.1 மதிப்பெண்களுடன் , 4வது இடம் பிடித்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட படமாக வெளியாகிய, 'ஆர்.ஆர்.ஆர் 'படம் 8 மதிப்பெண்களுடன் 5வது இடம் பிடித்துள்ளது.

'ஏ தேர்ஸ்டே' படம் 7.8 மதிப்பெண்களுடன் 6 வது இடம் பிடித்துள்ளது.

நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் அமிதாப் நடிப்பில் வெளியான 'ஜூண்ட்' படம் 7.4 மதிப்பெண்களுடன் 7 வது இடம் பிடித்துள்ளது.

அக்ஷய்குமார், மனுஷி ஷில்லார் நடிப்பில் வெளியான 'சாம்ராட் பிரித்விராஜ்', 7.2 மதிப்பெண்களுடன் 8வது இடம் பிடித்துள்ளது.

அஜய் தேவ்கான், அமிதாப் பச்சன் கூட்டணியில் வெளியான 'ரன்வே 34' , 7.2 மதிப்பெண்ணுடன் 9வது இடமும், ஆல்யா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் கதியவாடி 7 மதிப்பெண்ணுடன் கடைசி இடமும் பிடித்துள்ளது.