காபி டம்ளரை கையில் எடுக்கும் முன்...!
மிக உயர் ரத்த அழுத்தம் இருந்து, ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேல் காபி அருந்துவதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பலவித இதய நாளக் கோளாறுகளால் இறக்கும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
கடந்தாண்டு ஜப்பானில் நடந்த ஆய்வின் படி, அதீத ரத்த அழுத்தம் இருந்தவர்கள், 1 நாளில் 2க்கும் அதிகமான காபி அருந்தியதால், உயிரிழக்கும் வாய்ப்பு, காபி குடிக்காதவர்களை விட 2 மடங்கு அதிகம்.
ஒரு வேளை மட்டும் காபி, பலமுறை கிரீன் டீ குடித்தவர்களுக்கு உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கவில்லை.
சராசரியாக அல்லது குறைந்த அளவு உயர் ரத்த அழுத்தம் இருந்தவர்களுக்கு இதற்கான அபாயமே ஏற்படவில்லை.
ஆய்வின் முடிவில், மிக அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், காபியை தவிர்ப்பது நலம்.
காபியிலுள்ள, 'காபின்' என்ற வேதிப் பொருள், காபியில் உள்ள பாதுகாப்புத் தன்மையையும் மீறி பாதிப்பை தரலாம் என்பது தான் இதற்கு காரணம்.