உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க சில டிப்ஸ்!!

உணவில் பொட்டாசியம் நிறைந்து இருக்க வேண்டும். இது சோடியத்தின் அளவை கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள் அதிகமாக சாப்பிடும் போது, அதிகமான பொட்டாசியம் கிடைக்கும். தர்ப்பூசணி, கிர்ணி, வாழைப்பழம், அவகாடோ, ஆரஞ்சு இவற்றில் அதிகமான பொட்டாசியம் உள்ளது.

பால் பொருட்கள், பச்சை கீரைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு, நட்ஸ், விதைகள், தக்காளி, பீன்ஸ் வகைள் இவைகளில் பொட்டாசியத்துடன் கால்சியம் உள்ளது.

காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கு உடலில் நீர் சத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோய் வரும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

தினமும் நான்கு பல் பூண்டு சாப்பிடுவதால், அதில் உள்ள 'அலிசின்' என்ற வேதிப் பொருள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, அடைப்பை நீக்கும். காரமாக உணர்ந்தால் இட்லி பொடி, சட்னியில் சேர்க்கலாம்.

செம்பருத்தி இதழ், கேரட், பீட்ரூட் இவற்றில் லைக்கோபின் அதிகம்; இதயத்திற்கு நல்லது. மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள மாதுளை சாறு, ரத்தக் குழாயை தளர்வடைய செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.