உடல் சோர்வு, நாக்கு வறட்சியை சீராக்க டிப்ஸ் டிப்ஸ்...
வெயில் தாக்கத்தால் உடலில் உள்ள எனர்ஜி வீணாகி தலை வலி, சோர்வு ஏற்படும்.
அதிக தாகம் எடுத்து, நாக்கு வறண்டு காணப்படும். தோல் சுருக்கம் ஏற்படும்.
வெளியில் செல்லும் போது குடைபிடித்து செல்லவேண்டும். கைகளில் கிளவுஸ் அணிய வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது.
இளநீர், மோர், வெள்ளரி, பழ ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தளவு பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தினமும் இரு வேளை குளிக்க வேண்டும்.