தீபாவளி காரவகையை சுவையாக்க டிப்ஸ்!
பலகாரம் செய்ய எந்த மாவை உபயோகிப்பதாக இருந்தாலும், அதை சலித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உளுந்து மாவு கார வகைகளுக்கு, முழு உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு மெல்லிய தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின், மிக்ஸியில் நைசாகப் பொடித்து பயன்படுத்தவும்.
கார ஓமப் பொடிக்கு, சிகப்பு மிளகாய் வற்றலை நைசாக மிக்ஸியில் அரைத்து உபயோகிக்க வேண்டும். மிளகாய்ப் பொடி நன்றாக அரைபடாவிட்டால் பிழியும்போது அச்சு துளைகளில் அடைத்து, பிழிய வராது.
அரிசி மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, சாதாரண அரிசி மாவை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை பயன்படுத்துங்கள்.
புதிதாக வாங்கிய எண்ணெயில் பலகாரங்களைச் செய்தால், பலகாரங்களின் கரகரப்பு, நன்றாக இருப்பதுடன், அவை நாள்பட பழைய வாசனை வராமல் இருக்கும்.
மைதா மாவு, கடலை மாவு போன்றவற்றை உபயோகித்து செய்யும் கார வகைகளுக்கு புதிதான மாவையே பயன்படுத்த வேண்டும்.