ஹோட்டல் ஸ்டைல் சைனீஸ் வெஜ் சூப் ரெசிபி இதோ!
தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி, சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்துாள், நுாடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும்.
சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்துாளை துாவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும். சுவையான சூப் ரெடி...