தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் மோத்திசூர் லட்டு! ரெசிபி இதோ!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்வீட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி அனைவருக்கும் பிடித்த மோத்திசூர் லட்டை இந்த தீபாவளிக்கு செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் தேவை : கடலை மாவு- 125 கி, கேசரி பவுடர் - 1.4 ஸ்பூன், எண்ணெய் : தேவையான அளவு, சர்க்கரை - 250 கி, நெய் - 2ஸ்பூன், ஏலக்காய் தூள் - 1ஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10
செய்முறை : முதலில் ஒரு பவுலில் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கட்டி விழாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஆரஞ்சு கலர் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், சிறிய துளையுள்ள கரண்டியை பயன்படுத்தி மாவு கரைசலை பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில், 250 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.
மிதமான தீயில் பாகுவை வைத்து அதில் பூந்தி, சிறிதளவு கேசரி பவுடர், 2ஸ்பூன் நெய், 10 முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
இறுதியாக மிதமான சூட்டில் லட்டு பிடித்துப் பரிமாறினால் சுவையான மோத்திசூர் லட்டு தயார்.