செவி நரம்புகளை பாதிக்கும் அதீத அலைபேசி பயன்பாடு…
அலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவதால் காதின் செவி நரம்பு சோர்வடைய துவங்கும்.
இதனால் நரம்பு தலைவலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடனடியாக ஆடியோ கிராம் டெஸ்ட் செய்ய வேண்டும்.
அப்போதுதான் எந்த அளவிற்கு நரம்பு சோர்வு உள்ளது என்பதை கண்டறிய முடியும். அந்த அளவினை பொறுத்து தான் மருத்துவம் செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்துவதால் 50 வயதில் வரவேண்டிய நரம்பு தலைவலி தற்போது 20 வயதுள்ள இளைஞர்களுக்கும் வருவதாக கூறப்படுகிறது.
இப்படி அதிக அளவில் நரம்பு சோர்வடைவதால் நரம்பு சார்ந்த தலைவலி அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
இதற்கு ஆடியோ கிராம் டெஸ்ட் செய்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பை உணர்ந்தவர்கள் ப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.