பெண்களுக்கு நீர்கட்டி, சினைப்பை கட்டி எதனால் உருவாகிறது?
பொதுவாக அனைத்து வயது பெண்களுக்கும் இந்த கட்டி உருவாகும். குறிப்பாக 15 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு காணப்படும்.
பூப்பெய்தல் வயது 10ல் இருந்தே ஆரம்பமாகும் போதே இது உருவாக வாய்ப்பு உண்டு.
பசியின்மை, துாக்கமின்மை அதிகரித்தால் மாதவிடாய் பிரச்னை ஏற்படும். இதனாலும் உருவாகலாம்.
இதனால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதவிடாய் வராமல் இருக்கும். சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு நீர்க்கட்டி வரக்கூடும். இதனால் திருமணம் முடிந்தவுடன் கருத்தரித்தலில் சிரமம் ஏற்படும்.
பாதிப்பு உள்ளவர்கள் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். யோகா, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
துரித உணவு, நொறுக்கு தீனி தவிர்க்க வேண்டும். மூன்று வேளையும் சரியான நேரத்தில் அளவாக, நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.