மழைக்காலமும் சித்த மருத்துவ முறைகளும்!!
மழைக்காலங்களில் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா, சேற்றுப்புண், கழிச்சல் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படும். இந்த நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிப்பது அவசியம்.
வெந்நீர் குடித்தல், துளசி, மஞ்சள், மிளகு, கற்பூரவள்ளி, இஞ்சி போன்றவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக குடிக்கலாம்.
சூடான பாலில் மஞ்சள், மிளகுத்துாள், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
தொண்டை வலி ஏற்பட்டால் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
சித்த மருத்துவ முறையில் ஆவி பிடிப்பதை கடைபிடிக்க வேண்டும்.ஒரு லிட்டர் நீரில் நொச்சி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் ஒரு ஸ்பூன் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
அல்லது வேப்பிலை ஒரு கைப்பிடி, யூகலிப்டஸ் தைலம் மூன்று முதல் ஆறு துளிகள் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.
மழைக்காலங்களில் துாதுவளை ரசம் எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்பு குடிநீர் எடுத்துக் கொள்ளலாம்.
சளி, இருமலை குணப்படுத்த சித்த மருந்துகளான தாளி சூரணம், திரி கடுகு சூரணம், ஆடாதொடை குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, தாளி சாதி வடகம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நல்லது.