ஹெல்த்தியான ஸ்வீட் கார்ன் சூப் ரெசிபி
தேவையானப் பொருட்கள்: ஸ்வீட் கார்ன் : 1, பச்சை மிளகாய் : 1, கேரட்
: 1, பீன்ஸ் : 8 - 10, இஞ்சி : 1/2 இன்ச் அளவு, கூம்பு கிழங்கு தூள்
(arrow root powder) : 2 டீஸ்பூன்.
குருமிளகு தூள் : 1/2 டீஸ்பூன், வெங்காயத்தாள் : சிறிதளவு, எலுமிச்சம்பழம்: 1/2, உப்பு : தேவையான அளவு.
மூன்றில் ஒரு பங்கு ஸ்வீட்கார்னை மிக்ஸி ஜாரில் சிறிது கொரகொரப்பாக அரைத்து தனியே வைக்கவும்.
கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த ஸ்வீட் கார்ன், பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேக விடவும்.
ஒரிரு நிமிடங்கள் கழித்து நறுக்கிய பீன்ஸ் மற்றும் இஞ்சியை சேர்த்து மூடி வைக்கவும்.
அடுப்பை
குறைவான தணலில் வைத்திருக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து
நன்றாக கலக்கிவிட்டு, மீதமுள்ள ஸ்வீட்கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்த்து வேக விடவும்.
2 நிமிடங்கள் கழித்து சூப் கெட்டி
தன்மையுடன் இருப்பதற்காக கூம்பு கிழங்கு பவுடரை ( arrow root powder)
சிறிதளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
பின், குருமிளகு தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
இப்போது ஆரோக்கியமான, சுவையான ஸ்வீட்கார்ன் சூப் ரெடி